Friday, October 25, 2019

தீபாவளி குதூகலமும், கண் பாதுகாப்பின் அவசியமும்

தீபத்திருநாளாம் தீபாவளி, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை ஆனால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அனைத்து மதத்தினரும் வேறுபாடுன்றி இந்தப்பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர் இப்பண்டிகையை பாரம்பரியமாக வாழ்வின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும்.
இவ்வாறு கொண்டாடப்படும் பொது நாம் சில பாதுகாப்புகளை மேற்கொள்ள வேண்டும் கைவிரல் அடுத்து பட்டாசினால் பாதிக்கப்படும் முக்கியமான உறுப்பு கண்கள் அதனால் உரிய பாதுகாப்புடன் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கண்காணிப்பின் கீழ் வெடி வெடித்து கொண்டாட வேண்டும் தீபங்கள் ஏற்றியும் தீய சக்திகளை விரட்டி அடிக்க பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய தீபாவளியை நாம் கொண்டாட கீழ்வரும் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

செய்யவேண்டியவை: செய்யக்கூடாதவை
  • பெற்றோர்களின் மேற்பார்வையில் வெடி வெடிக்க வேண்டும்
  • நீளமான ஊது வத்தியை உபயோகிக்க வேண்டும்
  • கண்ணில் காயம் ஏற்பட்டால் உடனே கண்களை திறந்து சுத்தமான குளிர்ந்த நீர் ஊற்றி கழுவ வேண்டும்
  • கண்ணில் வெடி மருந்து பட்டாலும் கண்களை குளிர்ந்த நீரை ஊற்றி கழுவ வேண்டும்
  • கண்களை கசக்க வேண்டாம்
  • கண்களை பரிசோதிக்காமல் சுய வைத்தியம் மேற்கொள்ள வேண்டாம் தாய்ப் பால் ஊற்ற வேண்டாம்
  • கண்ணில் நீங்களாகவே களிம்பு மருந்து போட்டால் பரிசோதிப்பது சிரமமாக இருக்கும் அதனால் கண்கணில் எந்த காயம் ஏற்பட்டால் கண்களை குளிர்ந்த நீரில் கழுவியவுடன் மருத்துவமனைக்கு விரைந்து வரவும்
  • எந்தவொரு காயத்தையும் லேசாக என்ன வேண்டாம்
  • திறந்த வெளியில் பட்டாசுகளை வெடித்து மகிழவும்
  • அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ளவும் பஞ்சுத் துணிகளை உபயோகிக்கவும் நைலான் துணிகளை தவிர்க்கவும்
  • பூ சட்டிகள் வெடிக்கும் போது மிகவும் குனிந்து பொருத்த வேண்டும்
  • காண்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கப்பவர்களாக இருந்தால் வெடி வெடிக்கும் போது காண்டாக்ட் லென்ஸ் இல்லாமல் கண்ணாடி அணியவும்
  • பட்டாசு வெடிக்கும் போது ஒரு பாதுகாப்பு கண்ணாடி அணிவது மிகவும் நல்லது
மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றி இந்த தீபாவளியை இனிமையாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடுங்கள்.
         
Dr. பிரவீன் குமார் 
MBBS., DO., DNB., FRCS (UK-Glasg)


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அனைத்து அவசரக்கால சிகிச்சைக்கு அணுகவும்
டாக்டர் அணில் குமார் கண் மருத்துவமணை

No: 2D-1 P.S.R.Road,
Sivakasi.
Ph No: 04562-221065
Mobile: 9487131100
Opp PRC Depo
Sattur Road, Sivakasi.
Ph No: 04562-276234
Mobile: 9384311486, 9384311487

1 comment:

  1. You hospital topic article is fan, in details, i always work with reliable hopsital bed suppliers, please update it when you have any idear.

    ReplyDelete